a blurry blue background with horizontal lines
a blurry blue background with horizontal lines

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

Nanganallur Desk and Spiritual Desk

a blurry blue background with horizontal lines

இன்று மார்கழி மாதம் பிறப்பு
மார்கழி மாதத்தின் சிறப்புகள்!!

🍁'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார்.
🍁மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். (பீடு=பெருமை)
🍁இம் மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.
🍁மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உகந்தது.

🍁 தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் 'தனுர் மாதம்" எனவும் அழைப்பர்.
🍁 இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம்.
🍁 ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது.
🍁எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப் பக்தர்கள் இம்மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர்.
🍁இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 'என்றும் பதினாறு வயது' எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற மார்க்கண்டேயர் பிறந்தார்.

எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.

மிருத்யுஞ்ச ஹோமம்( யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஆருத்ரா தரிசனம்
சிவபெருமானின் "ஆருத்ரா தரிசனம்" மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது. ஆதிரையான்" என்றும் சிவனை அழைப்பர்.

சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது.

திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும்.

இவ்விழாவில் சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு என்பதுஅனைத்து வைணவ ஆலயங்களிலும் முக்கிய நிகழ்சியாகும்.

பாவை நோன்பு
ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர்.

பெண்கள் கடைப்பிடித்த விரதமானதால் இவ்விரதம், பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.

பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள், பாவை நோன்பினை மேற்கொண்டு, அரங்கனை கணவனாக அடைந்தாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமான பெண்களோ, மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர்.

பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருவெம்பாவை நோன்பு
திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர்.

இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர்.

இவ்விரதத்தின்போது மாணிக்கவாசகர் அருளிய 'திருவெம்பாவை" பாடல்கள் பாடப்படுகின்றன.

முருகன் படி உற்சவம்
ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலைபடிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர்.

இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி
மார்கழி மாதத்தில் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

உத்பன்ன ஏகாதசி/உற்பத்தி ஏகாதசி
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி "உத்பன்ன ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது.

இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி. எனவே இந்தப் பெயர் பெற்றது.

இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல செல்வங்களும் கிடைக்கும்; எதிரிகளை வெல்லலாம்.

மார்கழி மாதத்தில் 63 நாயன்மார்களில், வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகின்றது.

பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் பிறந்தவர்களாவர்.

மார்கழி மாதத்தில் வாசலில் கோலம் இட்டு சாணத்தைப் பிடித்து கோலத்தில் வைத்து, பிள்ளையாரரைப் போற்றி வழிபடுகின்றனர்

தேவர்கள் இறைவனை துதித்து வழிபடும் மாதம் மார்கழி.

 --- நங்கநல்லூர் கனெக்ட் வாசகர்

Join our Channel to get instant updates (turn on the bell button on top right of the channel to turn on notifications)
Channel link - https://whatsapp.com/channel/0029Vb7ICQp11ulNtwS1UU2e

Send "Nanganallur" to 72003 05853 to receive Nanganallur updates directly on your WhatsApp.
For advertising and graphic designing works, reach out to us on 72003 05853.

(Contact 7200305853 for Advertising and Graphic designing works)

people on street during daytime
people on street during daytime
a blurry blue background with horizontal lines